நடிகர் மோகன்லால் நடித்த சமீபத்திய திரைப்படங்கள் எம்புரான் மற்றும் தொடரும் நல்ல வரவேற்பையும், வசூலிலும் வெற்றியையும் பெற்றன. இதைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஹ்ருதயப்பூர்வம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை பகிர்ந்த மாளவிகா, “ஓணத்தை நல்ல இதயங்களுடன் நிரப்புங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரைப்படமான பூவே உனக்காக படத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை சங்கீதாவும் இப்படத்தில் இணைந்துள்ளார். ஓணத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படமும் வெற்றிபெற்று, மோகன்லால் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.