நடிகை பூஜா ஹெக்டேவுடன் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்து மக்களை கவர்ந்த குழந்தை நட்சத்திரம் கமலேஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு உங்களுடன் வேலை பார்த்த அனுபவம் ரொம்பவே நல்லா இருந்துச்சு மேடம், ரொம்ப நன்றி எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு பூஜா ஹெக்டே இந்தியில் தேவ், தமிழில் ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கூலி படத்தில் மோனிகா பாடலுக்கும் நடனமாடி உள்ளார். விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
