கடைசியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘சர்தார் கப்பார் சிங்’ படத்திற்காக அவர் அப்படியான சந்திப்பில் கலந்து கொண்டார். அதற்கடுத்து நடித்த படங்களுக்காக அவர் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை. விரைவில் பான் இந்தியா வெளியீடாக வெளியாக உள்ள ஹரி ஹர வீர மல்லு படம் முகலாயர் காலம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஹிந்தியிலும் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் பவன் கல்யாண் மேலும் அவர்களின் பல கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
