கன்னடத்தில் வெளியான ஹாரர் காமெடி “Su From So”, பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வெற்றியை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புதுமுகங்களை மட்டுமே கொண்ட இப்படம் ₹100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றிக்குப் பிறகு, Jio Hotstar படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியது. ஆரம்பத்தில், செப்டம்பர் 5 அன்று OTT-யில் வெளியாகும் என அறிவித்து இருந்தாலும் நேற்று திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் . ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 9, 2025 முதல் Hotstar டிஜிட்டல் தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
