Wednesday, October 2, 2024

என்னைப் போன்ற நடிகைகளுக்கு ஓ.டி.டி. ஒரு கேம் சேஞ்சர்.. நடிகை சம்வேன்தா ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சம்வேத்னா சுவால்கா, சமீபத்தில் வெளியான ‘கியாரா கியாரா’ என்ற தொடரில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது, அவர் ‘ஹனிமூன் போட்டோ கிராப்பர்’ என்ற தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் கடந்த 27ஆம் தேதி ஓ.டி.டியில் வெளியானது.

இதற்கிடையில், நடிகர்கள் நட்சத்திரமாக மாறும் வரை தங்கள் வாழ்க்கையை திட்டமிட முடியாது என்று சம்வேத்னா சுவால்கா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் தற்போது ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதற்கு முன்பு, ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்தேன், இது எனது முதல் எதிர்மறை பாத்திரமாகும். என்னைப் போன்ற நடிகைகளுக்கு ஓ.டி.டி. ஒரு கேம் சேஞ்சர். இதில் நடிப்பதற்கான வாய்ப்புகள் பெரிய நட்சத்திரமா, சிறிய நட்சத்திரமா என்பதைப் பொருட்படுத்தாமல் கிடைக்கின்றன.  

ஒரு நல்ல கதை கொண்ட படமே வெற்றி பெறும். இதற்காக, பெரிய நட்சத்திரங்கள் மட்டுமே தேவையில்லை. எனவே, என்னைப் போன்றவர்கள் கூட இதில் பங்கு பெற முடியும். நீங்கள் ஒரு நட்சத்திரமாக மாறும் வரை, உங்கள் வாழ்க்கையை திட்டமிட முடியாது’ என அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News