கத்துக்குட்டி’, ‛உடன் பிறப்பே’ போன்ற படங்களை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடித்த படம் கடந்த ஆண்டு வெளியான ‛நந்தன்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், சசிகுமார் இதுவரை செய்யாத புதிய விதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டினர்.
இந்நிலையில் இயக்குனர் இரா சரவணன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் இருக்கும் அனைத்து தலித் பஞ்சாயத்து தலைவர்களும் கொடியேற்றியுள்ளனர். மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் ‛நந்தன்’ படத்தின் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதனுடன் அவர், கொடியேற்றிய பஞ்சாயத்து தலைவர்களின் விடியோவையும் பகிர்ந்துள்ளார்.

