இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கூட்டணியில் வெளியான சிம்மா, லெஜன்ட், அகண்டா போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன. தற்போது வெளியாகியுள்ள பாலய்யாவின் டாக்கூ மகாராஜ் திரைப்படம் வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.
பாலய்யா நடிப்பில் வெளியான ‘அகண்டா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர், அகண்டா 2ம் பாகம் தயாரிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ’14 ரீல்ஸ் ப்ளஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது. இதில் இசையமைப்பாளராக மீண்டும் தமன் பணிபுரிகிறார்.
இப்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா நிகழ்வில் இன்று தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது.