‘ஓகே கண்மணி’, ‘நாய் சேகர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் பவித்ரா லட்சுமி. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ போன்ற சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டதாகவும், அதன் விளைவாக உடலில் அலர்ஜி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது.

இந்த தகவலுக்கு பவித்ரா லட்சுமி நேரடியாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாகச் சொல்லப்படுவது முற்றிலும் தவறான தகவல். அதேபோல், நான் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறவும் இல்லை. சமூக வலைதளங்களில் இத்தகைய பொய்யான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.
உங்கள் பொழுதுபோக்கிற்காக எனது வாழ்க்கையை விளையாட்டாக கருத வேண்டாம். எனக்கும் எதிர்காலம் இருக்கிறது. இந்தவகையான வதந்திகள் என் வாழ்க்கையை மேலும் சிரமமாக்கக் கூடாது” என்று கேட்டுக்கொண்டுள்ளார் பவித்ரா லட்சுமி.