நிவின் பாலி நடிக்கும் மலையாள திரைப்படம் சர்வம் மாயாவை பிரபல இயக்குனர் சத்தியன் அந்திக்காட்டின் மகன் அகில் சத்யன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நிவின் பாலியுடன் அர்ஜுன் வர்க்கீஸ், ஜனார்த்தனன், பிரீத்தி முகுந்தன், ரகுநாத பலேரி, மது வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார், ஷரன் வேலாயுதன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படப்பணி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுநீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.

