துபாயில் பிறந்து வளர்ந்த மதுரை பெண் நிவேதா பெத்துராஜ், மாடலிங் துறையில் இருந்தபோது ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை நிவேதா பெத்துராஜ், நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தான் திருமணம் செய்ய உள்ள மணமகனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
மணமகனின் பெயர் ரஜித் இப்ரான். இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர் மட்டுமல்லாமல், தொழில் அதிபரும் ஆவார். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.