தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி. பிரகாஷ் குமார், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்போடு மட்டும் அல்லாமல், நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த கிங்ஸ்டன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள புதிய படம் பிளாக்மெயில். இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இதனை இயக்கியுள்ளார். இதில் தேஜு அஸ்வினி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த பிளாக்மெயில் திரைப்படம், முதலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, படக்குழு புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.