சென்னை கே.கே. நகரில் ராம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ‘நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்’ என்ற பிரம்மாண்டமான ஷூட்டிங் ஹவுஸ் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சென்னையில் புறநகரில் மட்டுமே அதிகமான ஷூட்டிங் ஹவுஸ்கள் இருக்கின்றன. அங்கு படப்பிடிப்பை நடத்தினால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிகமான நேரம், மற்றும் எரிபொருள்,வீணாகி வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போகிறது என்பது அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் தெரிந்த விஷயம்.
தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக திரு.மஸ்கட் C.ராமலிங்கம் அவர்களின் ராம் ஸ்டுடியோஸ் நிறுவனம் எண் : 452, R.K.சண்முகம் சாலை, கே.கே. நகரில் ‘நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்’ என்ற சொகுசு ஷூட்டிங் பங்களாவை உருவாக்கி உள்ளது.
பார்க்கிங் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர். இதைத் தவிர வெளிப்புற படப்பிடிப்புக்கு இடம் தேவையென்றால் அதற்கும் புறநகரிலேயே பேக்டரி செட்டப், திருமண மண்டபம், மாந்தோப்பு, பார் செட்டப், நெல்லித்தோட்டம்,
தென்னந்தோப்பு, வில்லேஜ் செட்டப், மற்றும் பிரம்மாண்ட செட்டுகள் போட தரிசு நிலம் என படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ராம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் செய்துள்ளனர்.
உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக முதல் படம் இயக்கும் இயக்குநர்களுக்கு வாடகையில் சில சலுகைகளும் தர இருப்பதாக இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
கே.கே நகரில் அமைந்துள்ள இந்த ‘நேத்ரா ஷூட்டிங் ஹவுஸின்’ திறப்பு விழா நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவரும், பெப்சி தலைவருமான R.K.செல்வமணி, தயாரிப்பாளர் (அம்மா கிரியேஷன்ஸ்) T.சிவா, இயக்குநர் R.V.உதயகுமார், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகருமான சித்ரா லட்சுமணன், நடிகர் பஞ்சு சுப்பு, ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தலைவர் கார்த்திக் ராஜா, சின்னத்திரை இயக்குனர்கள் சங்க செயலாளர் CRC.ரங்கநாதன்,
இயக்குனர்- தயாரிப்பாளர் நந்தன், தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தலைவர் பாலகோபி, கலை இயக்குனர்கள் சங்க செயலாளர் மோகன மகேந்திரன், GBS K.நாகேந்திரன், K.ராஜேஷ்கண்ணா, ஆகியோர் கலந்து கொண்டு ஷூட்டிங் ஹவுஸை திறந்து வைத்தனர்.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் ராம் ஸ்டுடியோஸ் நிறுவனர் மஸ்கட் C.ராமலிங்கம் அவர்கள் நன்றி தெரிவித்தார்.






