நடிகர் தனுஷின் சகோதரியின் மகனான பவிஷ், தனுஷின் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். பின்னர், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது, பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பவிஷின் தாத்தாவும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கினார்.மேலும், பவிஷின் மாமாவான இயக்குனர் செல்வராகவன் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த படத்தில் ஆந்திராவைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் நாகதுர்கா ஹீரோயினாக நடிக்கிறார்.புதுமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கும் இத்திரைப்படம் ஜென் Z தலைமுறையினருக்கும் குடும்பத்தினருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி வருகிறது. மரபும் நவீனத்துவமும் கலந்த, கவிதைமிகுந்த காதல் கதை இதன் மையமாக இருக்கும். இப்படம் 2026 கோடைக்காலத்தில் வெளியிடப்படும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

