தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அதிரடியான மாஸ், மசாலா படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவரின் 111வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகிறது. இதனை விரிந்தி சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இது வரலாற்று பின்புலத்தில் பிரமாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகிறது. இன்று நடிகை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் கதாநாயகியாக ராணி ஆக நயன்தாரா நடிக்கின்றார் என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே பாலகிருஷ்ணா, நயன்தாரா இணைந்து சிம்மா, ஸ்ரீ ராம ராஜ்யம், ஜெய் சிம்மா ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இப்போது இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

