நடிகர் யஷ் நடிப்பில், மலையாள திரைப்பட இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் டாக்ஸிக். இது கேஜிஎஃப் 2 படத்திற்குப் பிறகு யஷ் நடிக்கும் படம் என்பதால், ரசிகர்கள் இதில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் யஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மற்றும் மும்பையில் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய செட்டுகளில் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை நயன்தாரா, இதற்கு முன்பு டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார், அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
அதேபோல், நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 4 அன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, டாக்ஸிக் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள, நயன்தாரா மும்பை சென்றுள்ளார். அவருடைய மகன்களுடன் மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவியுள்ளது.