அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இநத படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நவீன் சந்திரா 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘சரபம்’ படத்தில் நடித்தேன். அதன் பிறகு தமிழில் ‘லெவன்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இந்த கதையை கேட்ட பிறகு இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எனக்கு ஏற்பட்டது. இந்த திரைப்படத்தை ஒரு படமாக இல்லாமல் இரண்டு படமாக தமிழ் தெலுங்குக்கு என தனித்தனியாக படப்பிடிப்பு நடத்தினோம். நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.
