தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பாலகிருஷ்ணா (பாலய்யா). அவர் தற்போது அகண்டா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணா, தாம் முழுமையாக திரைப்படங்களையே சிந்திப்பதாகவும், அதையே வாழ்க்கையின் ஒரு பகுதியாக சுவாசிப்பதாகவும் கூறினார். புகழ்பெற்ற நடிகர் மற்றும் தலைவர் என்டிஆரின் மகனாக இருப்பதில் மிகுந்த பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தனது வாழ்க்கை திரைப்படங்களையும், சமூக சேவையையும் சுற்றியே அமைந்திருப்பதாகவும், சினிமா போன்று தன்னை உற்சாகப்படுத்தும் வேறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

