‘உலக அழகி’ பட்டம் பெற்று திரைப்படத்துறையில் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், தனது நடிப்பின் மூலமாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழிலும் ‘இருவர்’, ‘ஜீன்ஸ்’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘ராவணன்’, ‘எந்திரன்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு, பாலிவுட் நட்சத்திரம் மற்றும் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை அவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற 13 வயது மகள் உள்ளார்.இந்தத் தேதியில், ஆராத்யாவைப் பற்றி அபிஷேக் பச்சன் கூறிய கருத்துகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
அதில் “என் மகள் எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இல்லை. செல்போன் பற்றிக் கூட அவளுக்குப் பெரிதாக ஆர்வம் கிடையாது. இது என் மனைவியின் காரணமாகத்தான். ஆராத்யா எங்கள் குடும்பத்தின் பெருமை. அவள் சிறப்பாக இருப்பதற்கான முழு பாராட்டும் என் மனைவிக்கு செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.