Touring Talkies
100% Cinema

Thursday, August 7, 2025

Touring Talkies

சோனு சூட் நடிக்கும் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் இசையமைப்பாளர் சாம்.சிஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ், ‘ஓர் இரவு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, ‘விக்ரம் வேதா’, ‘அடங்கமறு’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘ராக்கெட்ரி’, ‘கைதி’ உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்ததன் மூலம், பலரின் கவனத்தைப் பெற்றார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் முதல்முறையாக பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். சோனு சூட் நடித்துவரும் ஒரு புதிய ஹிந்தி திரைப்படத்திற்காக சாம் சி.எஸ் இசையமைக்க இருக்கிறார். இதற்குமுன் இவர் இசையமைத்த ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இந்திப் பதிப்பு ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News