தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் தேனிசை தென்றல் தேவா. இவரது சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் சேர்ந்து சபேஷ்-முரளி என்ற காம்போவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். மேலும் இவர்கள் தேவாவின் திரைப்படங்களில் இசை பணிகளையும் செய்துள்ளனர். இந்நிலையில் தேவாவின் சகோதரர் சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களுக்கு சபேஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


