‘கே47’ எனும் கிச்சா சுதீப்பின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தை விஜய் கார்த்திகேயன் இயக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த ‘மேக்ஸ்’ படத்திற்கு பிறகு சுதீப்பும் விஜய் கார்த்திகேயனும் மற்றொருமுறை இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

தமிழில் ‘பட்டாசு’, ‘லெவன்’ போன்ற படங்களில் தனது நடிப்பிற்காக பாராட்டைப் பெற்ற நவீன் சந்திரா, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ‘மார்கன்’ திரைப்படத்தில் நடித்திருந்த தீப்ஷிகா, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘மேக்ஸ்’ படத்தில் இருந்த தொழில்நுட்பக் குழுவே இப்படத்திலும் பணியாற்றுகின்றனர். இசையமைப்பாளராக அஜனீஷ் லோக்நாத் பணியாற்ற, ஒளிப்பதிவாளராக சேகர் சந்துரு பணியாற்றுகிறார்.