மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “தொடரும்” திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு, பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கும் “ஹிருதயபூர்வம்” என்ற புதிய படத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் பிரேமலு புகழ் கொண்ட காமெடி நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு சத்யன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவான “என்னும் எப்பொழுதும்” திரைப்படத்திற்குப் பிறகு, 10 வருடங்களுக்குப் பின் இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்களிடம் இந்த புதிய படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. “ஹிருதயபூர்வம்” படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், “ஹிருதயபூர்வம்” படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஹிருதயபூர்வம்” படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.