பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் – தம்பி ராமையா நடித்த ‛கும்கி’ (2012) விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. அந்த படத்தில் ஒளிப்பதிவு செய்த சுகுமார்க்கும் நல்ல பெயர் கிடைத்தது.

தற்போது, பிரபு சாலமன் – சுகுமார் மீண்டும் இணைந்து ‛கும்கி 2’ படத்தில் பணிபுரிகின்றனர். முழுக்க காடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில், மதியழகன் ஹீரோவாகவும், ஹரிஷ் பெராடி வில்லனாகவும் அறிமுகமாகின்றனர். பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலான நிலையில், ‛கும்கி 2’ நவம்பர் 14 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.