மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘பைசன்’. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இது ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண் திரைப்படமாகும். இப்படத்திற்காக துருவ் விக்ரம் தீவிரமாக கபடி பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தற்போது, பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சியை இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் இணைந்து பார்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தயாரிப்பு குழு வெளியிட்ட பதிவில், “மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் – காளமாடன் திரைப்படத்தை பார்த்தோம். அது எங்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. This is Mari on – இது ஒரு அனல் பறக்கும் சக்திவாய்ந்த கலைப்படைப்பு. இப்படத்தை பாராட்டுகிறோம். இத்தகைய துணிச்சலான மற்றும் திறமைக்குரிய படத்தை தயாரித்ததில் Applause நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இந்த தீபாவளிக்கு பைசன் வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.