சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராம் “மாரி செல்வராஜ்-ஐ புகழ்ந்து பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது மாரி செல்வராஜின் வெற்றி என்பது எங்கள் குடும்பத்தின் வெற்றியாகும்… எங்கள் குழுவின் வெற்றியாகும்… இது போதாது என்பதே என் உணர்வு. அவரிடம் உள்ள கதைகளின் தன்மையை வைத்து தான் கூறுகிறேன் – பான் இந்தியா இயக்குநராக மாறும் திறமை அவரிடம் நிரம்பி உள்ளது.

ஒவ்வொரு படத்திலும் முன்னேற்றம் காண்கிறார். ‘பரியேறும் பெருமாள்’விட ‘வாழை’ எனக்கு அதிகம் பிடித்தது. ‘பைசன்’ திரைப்படத்தையும் பார்த்தேன். ‘வாழை’யை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது” என தெரிவித்தார்.
தற்போது இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்போது, படக்குழுவினர் இப்படத்துக்கான ப்ரோமோஷனில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்கள்.