வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாகமஞ்சு வாரியர்நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவருடன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். வெற்றி மாறனுடன் மஞ்சுவாரியர், தினேஷ் இருக்கும் புகைப் படங்கள்சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.