மணிரத்னம் இயக்கித்தில் ரோஜா படத்தில் நடித்த அரவிந்த்சாமி, பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து முக்கிய நாயகனாக உயர்ந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதன் பாதிப்பாக தலைமுடி கொட்டிவிட்டது. மேலும் எடை குறைந்து ஆளே மாறிவிட்டார்.
சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நிலையில், இவரை இரண்டாவது முறையாக சினிமாவில் தூக்கி விட்டவர் இயக்குனர் மணிரத்தினம். எந்த வாய்ப்பும் இவரை தேடி வராத நிலையில் 2013 ஆம் ஆண்டு கடல் படத்தின் மூலம் இவருக்கு சாம் பெர்னாண்டோ என்ற கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்தார்.
அதன் பிறகு தான் தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு கேரக்டர் இவருக்கு கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு தற்போது அனைவர் மனதிலும் நச்சென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.