Touring Talkies
100% Cinema

Wednesday, November 5, 2025

Touring Talkies

சிறந்த நடிகருக்கான கேரள அரசின் திரைப்பட விருதை வென்ற மம்மூட்டி… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரள மாநில அரசின் 2024ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘பிரம்மயுகம்’ திரைப்படத்தில் தன் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மம்முட்டி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ஏழாவது முறையாக மாநில விருதை வென்றுள்ளார்.

மாநில விருதை வென்றதை அடுத்து, சமூக வலைதளத்தின் மூலம் நன்றியை தெரிவித்துள்ளார் மம்முட்டி. அதில், “மஞ்சும்மல் பாய்ஸ், பொகன்வில்லா, பிரேமலு படக்குழுவினர் மற்றும் மற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் — ஷம்லா ஹம்சா, ஆசிப், டோவினோ, சவுபின், சித்தார்த், ஜோதிர்மயி, லிஜோ மோல், தர்ஷனா, சிதம்பரம் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

பிரம்மயுகம் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியதற்காக. படத்தில் நான் நடித்த கோடுமன் பொட்டி என்ற கதாபாத்திரத்தை இவ்வளவு அன்போடு வரவேற்ற ரசிகர்களுக்கே இந்த விருதை நான் பணிவுடன் அர்ப்பணிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News