தக் லைப் படத்திற்கு பின் நடிகர் கமல்ஹாசன் அடுத்து ஸ்டன்ட் இயக்குனர்களான அன்பு–அறிவு இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 237வது படமாக உருவாகிறது. இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் காலதாமதமாகும் என முன்னதாக செய்திகள் வெளியாகின. தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள கதை எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ், மகிஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் கதை எழுத்தாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.