அஷ்வின் குமார் இயக்கத்தில் உருவாகிய மிகப் பெரிய அனிமேஷன் திரைப்படமான ‘மஹா அவதார் நரசிம்ஹா’ கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் விஷ்ணுவின் கடைசி பக்தனாக விளங்கும் பிரகலாதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் வெளியானதிலிருந்து தினசரி வசூலில் அதிகரிப்பைப் பெற்று வருகிறது. வெளியான முதல் நாளில் 1.75 கோடி ரூபாயையும், இரண்டாம் நாளில் 4.6 கோடியையும், மூன்றாவது நாளில் 9.5 கோடியையும் மற்றும் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் 13.7 கோடியையும் வசூலித்துள்ளது. தற்போது வரை உலகளவில் இப்படம் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் அதிக வசூல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி, இப்படத்தை இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கான இசையமைப்பை சாம் சி எஸ் செய்துள்ளார் மற்றும் ஹொம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த ‘சினிமாடிக் யூனிவெர்ஸ்’ திட்டத்தின் கீழ், விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் திரைப்படங்களாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த படங்கள் 2025 முதல் 2037 வரை தொடர்ச்சியாக வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.