நடிகர் ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படமான ‘துரந்தர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதில் ரன்வீரின் தோற்றம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைவிட ஆர். மாதவனின் தோற்றமே பார்வையாளர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மாதவன், தனது தோற்றத்தை முற்றிலும் மாறடையச் செய்து, அடையாளம் காண முடியாத அளவிற்கு பரிணாமம் கொண்டு நடித்துள்ளார். அவரின் இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கின்ற அவரது திறமைக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்தப் படத்தில் சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அக்சய் கன்னா மற்றும் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.