மலையாளத்தில் வெளியாகி தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் லோகா. பிரேமலு புகழ் நஸ்லேன், கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் போன்றோரும் நடித்துள்ளனர்.

கல்யாணியின் நடிப்பு சமூக வலைத்தளங்களில் அதிக பாராட்டுகளை குவித்து வருகிறது. அதேசமயம், இப்படத்தை தயாரித்த துல்கர் சல்மானுக்கு ரசிகர்கள் “இப்படி ஒரு ஸ்டாண்டர்டான படத்தை தயாரித்ததற்கு பாராட்டி வருகிறார்கள். மலையாள சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களில் லோகா ஒன்றாகக் கருதப்படுகிறது.
சில முக்கிய நட்சத்திரங்கள் கேமியோவில் தோன்றி மகிழ்ச்சி தரும் தருணங்களை உருவாக்கியுள்ளனர். டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெறுவதுடன், நாளை இப்படம் தமிழிலும் வெளியாகிறது. குறிப்பாக, மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் படத்தை விடவும், லோகாவின் முன்பதிவு வேகமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.