Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் ‘லக்கி பாஸ்கர் ‘ படத்தின் கொல்லாதே பாடல்! #LUCKY BASKhAR

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், அவரின் படங்களுக்கு அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. சமீபத்தில் துல்கர் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் அதன்பின் அவர் நடித்த ‘கிங் ஆப் கோதா’ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதையடுத்து, அவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’.

இத்திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார், அவர் ‘வாத்தி’ படத்தை இயக்கியவர். ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதில் துல்கர் சல்மானுடன் மீனாட்சி சவுத்ரி நடிக்க, இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ளார்.

‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. மேலும், இப்படம் வரும் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘கொல்லாதே’ பாடல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News