Touring Talkies
100% Cinema

Wednesday, July 9, 2025

Touring Talkies

இசை இரைச்சலாக இருக்க காரணம் இசையமைப்பாளர்கள் என கூறுவது சரியல்ல – இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக செயல்பட்டு வருகிற சாம் சி.எஸ், அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை ஒலிக்கலவை (Sound Mixing) எனும் பிரிவுக்கு தனித்த விருதுகள் வழங்கப்படுவது போன்றே, ஒலிக்கலவை என்பது தனியாக ஒரு முக்கியமான துறை என்று அவர் விளக்கினார்.

தான் ஒரு படத்திற்கு பின்னணி இசை அமைப்பதே தனது பிரதான வேலை என்று கூறிய சாம், அதனை எவ்வளவு நுணுக்கமாக செய்தால்தான் நல்ல பலனை தரும் என்பதைப் புரிந்தவர் என தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் பல கட்ட நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் கூறினார்.சவுண்ட் எஃபெக்ட்ஸ், வசனங்கள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு இறுதி ஒலிக்காட்சி உருவாக்கப்படுகிறது. இதில் இசையமைப்பாளருக்கு நேரடி தொடர்பு இருப்பதில்லை. குறிப்பாக கே.ஜி.எஃப் திரைப்படத்துக்குப் பிறகு, இசையை மிக சத்தமாகக் கொடுத்தால் காட்சியின் தாக்கம் அதிகரிக்கும் என்ற ஒரு எண்ணம் உருவாகியிருப்பதாக அவர் கூறினார். இதனால் சில இயக்குனர்கள் இசையின் ஒலியை அதிகமாக வைத்துவிடுகின்றனர் எனவும், தனது சில படங்களை திரையரங்கில் பார்ப்போது, “நாம இப்படி பண்ணலையே” என்ற உணர்வும், எரிச்சலும் ஏற்படுகிறது எனவும் சாம்பு பகிர்ந்தார்.

அவ்வாறு நடந்திருந்தாலும், அந்த முடிவுக்கு இசையமைப்பாளர்கள் காரணம் அல்ல என்று அவர் வலியுறுத்தினார். இசை, ஒலி விளைவுகள், வசனங்களை ஒருங்கிணைத்து வழங்கும் ஒலிக்கலவை (mixing) துறையில் ஏற்படும் பிரச்சனைகள், பெரும்பாலும் இசையமைப்பாளர்கள்மேல் தவறாகச் சுமத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், இன்னொரு முக்கியமான சிக்கலாக, மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் ஒலிக்கலவையின் வேறுபாடு குறித்து சாம் சி.எஸ் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, ஒரு ஆங்கிலப் படம் ஓடும் போது, அதனுடைய ஒலிக்கலவை (mix) அதிக சத்தத்தில் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே திரையில் அதன் பிறகு ஓடும் தெலுங்கு திரைப்படமோ அல்லது மாஸ் படமோ இதே ஒலிக்காலத்தில் ஒலிக்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது. ஒவ்வொரு திரையரங்குக்கும் இத்தகைய தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளன என்றும், இந்த சிக்கல்களுக்கு இசையமைப்பாளர்களையே குறை கூறுவது முறையல்ல என்றும் சாம் சி.எஸ் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News