சிந்து சமவெளி’ படம் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்கள் என்னை பயமுறுத்தியது. முக்கியமாக அந்த படம் பார்த்த என் அப்பா அதிகமாக வருத்தப்பட்டார். எனது கதாபாத்திரம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.நாம் இதுபோன்ற கதாபாத்திரங்கள் செய்யக்கூடாது என்பதை அந்த படம் வெளியான பிறகுதான் புரிந்து கொண்டேன். அப்போது கேவலம் எனக்கு 17 வயது மட்டும் தான். இளம் நடிகை என்பதால் இயக்குனர் சொன்னதை கேட்டு குருட்டுத்தனமாக சம்மதித்து நடித்தேன்.
