நடிகை சாந்தி பிரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் மொட்டை அடித்தது குறித்து பகிர்ந்துகொண்டார் அதில், பெண்கள் எப்போதும் ஒரு ரூல்ஸை பாலோவ் செய்ய வேண்டும். நம்மை நாமே கூண்டுக்குள் அடைத்துக்கொள்கிறோம். நான் என்னை விடுவித்துக் கொண்டேன். மொட்டை அடிக்கும் போது சந்தேகம் இருந்தது. பட வாய்ப்புகள் கிடைக்குமா திரையுலகில் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தேன். ஆனால், மொட்டை அடித்த பின்பு தான் நிம்மதியாக இருப்பதை உணர்ந்தேன். ஒரு பெண் மொட்டை அடித்தால் பொதுவாக வேறு மாதிரி பேசுவார்கள். மனநிலை பிரச்னை என்றும் கூறுவார்கள். கொஞ்சம் பயம் இருந்தது. மொட்டை எடுத்த பிறகு என்ன நடந்தால் என்ன? எனது முடிவை நான் மாற்ற முடியாது என்பதை உறுதி செய்தேன். ஆனால், மொட்டை அடித்தால் கேன்சரா என்ற கேள்வியும் எழுந்தது.
