தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூர்யா. தற்போது அவர் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார், இது ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் திரைப்படமாகும். தற்காலிகமாக ‘சூர்யா 45’ என அழைக்கப்படும் இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர்.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோரும் நடித்துவருகின்றனர். இதில் சூர்யா ஒரு வக்கீலாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் கதை, நீதிமன்ற வழக்கை மையமாக கொண்டு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு வெளியீடு குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜூலை மாதம் 23ஆம் தேதி இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.