இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வரவிருக்கும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ளதால், அந்த நாளிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இதனாலேயே பல திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை தங்களது திரையரங்குகளில் வெளியிட ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், “கூலி” திரைப்படம் 2 மணி 50 நிமிடங்கள் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ஆக்ஷன் மற்றும் சண்டைக் காட்சிகள் அதிகம் உள்ளதனால், யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கும் எனத் கூறப்படுகிறது. அதேபோல், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய “லியோ” திரைப்படம் 2 மணி 44 நிமிடங்கள் நீளமுடைய படமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.