அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பணியாற்றிய ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதில் அஜித் குமாருடன் சேர்ந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, மேலும், இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, படக்குழு இரண்டாவது பாடலான ‘God Bless U’ பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தின் நேர அளவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணி 18 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும். இது தணிக்கை குழுவின் மதிப்பீட்டிற்குப் பிறகு, சில நிமிடங்கள் குறையக்கூடும். ஒரு மாச்ஸ் கமெர்ஷியல் படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.