சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எச். வினோத். அவரது இந்த முதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற திரைப்படங்களை இயக்கி, சினிமா உலகில் ஒரு முக்கிய இயக்குநராக அவர் தனது இடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் நடிகர் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு எச். வினோத் இயக்கப்போகும் அடுத்த திரைப்படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அவரது அடுத்த இயக்கப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும், அந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.