ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ‘கிங்’. சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் மார்பிளிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 2026 ஆம் ஆண்டில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளதால், இந்த ‘கிங்’ படத்திற்கான ரசிகர்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.