இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம், ₹600 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ என்ற இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார். ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் ‘ஜெயிலர் 2’ல் மீண்டும் கேமியோ ரோல்களில் தோன்ற உள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு பிரபல யூடியூபர் நடித்துவரும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, யூடியூபில் திரைப்பட விமர்சனங்களை வழங்குவதற்காக ரசிகர்களிடையே பிரபலமான கோடாங்கி, இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.