2023ஆம் ஆண்டு, ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த “ஜோ” திரைப்படம் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம், அறிமுக இயக்குநராக ஹரிஹரன் ராம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த திரைப்படத்தை ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க விஷயமாக, ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்த “மீசைய முறுக்கு” திரைப்படத்தில் ஹரிஹரன் ராம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.