அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு நேற்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. இதற்காக ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டு, இந்தப் படம் எந்த வகையானதாக இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தைச் சுற்றிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதுவரை வந்த தகவலின்படி, இப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரூ.800 கோடி என கூறப்படுகிறது. இதில் ரூ.200 கோடி படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற சம்பந்தப்பட்ட செலவுகளுக்காகவும், ரூ.200 கோடி அமெரிக்காவில் உருவாக்கப்படும் விஎப்எக்ஸ் செலவுகளுக்காகவும் செலவிடப்பட உள்ளதாகவும், மீதமுள்ள தொகை நடிகர் சம்பளங்கள், விளம்பர செலவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் ஒரு தகவலின்படி, இப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு ரூ.175 கோடி சம்பளமாக வழங்கப்படுவதாகவும், இயக்குநர் அட்லிக்கு ரூ.100 கோடி சம்பளமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மற்றொரு தகவலின்படி, அவர்கள் இருவரும் சம்பளத்தைத் தவிர்த்து, படத்தின் லாபத்தில் பங்கெடுக்க ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அல்லு அர்ஜுனுக்கு லாபத்தில் 30 சதவீதமும், அட்லிக்கு 15 சதவீதமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், அல்லு அர்ஜுனுக்கு ரூ.250 கோடி வரையிலும், அட்லிக்கு ரூ.125 கோடி வரையிலும் சம்பளம் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.