தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பிசியாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன். பாடகியாகவும், இசையமைப்பாளராகவும், நடிகையாகவும் பல்வேறு திறமைகள் கொண்டவர். இவர் இசை துறையிலே அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது காரிலிருந்து இறங்கும் போது பதிவான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ருதி ஹாசன் கையில் வைத்திருந்த பேக் மிகுந்த விலையுடையதென்பது தெரிய வந்ததும், அதை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த பேக்கின் விலை சுமார் ரூ.86,000 என கூறப்படுகிறது.அந்த பேக் இவ்வளவு விலை என்றாள் அதில் என்ன இருக்கின்றது? என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஸ்ருதி ஹாசனின் தந்தை புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும், ஸ்ருதி தனது திறமையின் மூலம் நடித்து சம்பாதித்து சொந்தக்காலில் வாழ்ந்து வருகிறார். அவர் நடித்தும், பாடியும் சம்பாதித்த சொத்துகள் ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை இருக்கின்றன என்று கூறப்படுகிறது.