Wednesday, December 18, 2024

பார்க்கிங் பட இயக்குனருடன் கைக்கோர்க்கிறாரா சிம்பு? வெளியான அப்டேட்டால் ரசிகர்கள் ஆவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹரிஷ் கல்யாண், எம். எஸ். பாஸ்கர், மற்றும் இந்துஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பார்க்கிங் என்ற படத்தை இயக்கியவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். கார் பார்க்கிங் தொடர்பாக இரண்டு நபர்களுக்கிடையே நடைபெறும் மோதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வித்தியாசமான கதையுடன் இந்த படம் உருவாக்கப்பட்டது.

தமிழில் மிகுந்த வெற்றியை அடைந்த இந்த படம் தற்போது பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அடுத்த புதிய படத்தினை இதுவரை அறிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது நடிகர் சிம்புவிடம் ஒரு கதையை சொல்லி அவரது ஒப்புதலை பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், அப்படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனவாம்.

தக்லைப் படத்தை முடித்ததும், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கும் சிம்பு, அந்த படத்தை முடித்த உடனே ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.ஓமை கடவுளே என்ற வெற்றிப் படத்தை முதன்முதலாக இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, தற்போது லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News