நடிகர் சந்தானம் தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சந்தானம் நீண்ட வருடங்களுக்கு பிறகு வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்ததாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
இதுபற்றி கோலிவுட் வட்டாரங்களில் சிலர் இது வதந்தி தான் என்றும் இது குறித்த ஒரு பேச்சு வார்த்தை கூட சந்தானத்திடம் நடைப்பெறவில்லை என கூறுகின்றனர்.