‘ஜவான்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லி, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய ஒரு படத்தை இயக்கவுள்ளார். இது சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட பேண்டஸி படம் ஆகும். இப்படம் இதுவரையில்லாத அளவு பல கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருடன் சேர்ந்து மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் இதில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
தற்போது மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ மற்றும் ‘புஷ்பா 2’ படங்களில் நடித்திருந்தார் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.