தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நாக சைதன்யா, சில மாதங்களுக்கு முன்பு நடித்த “தண்டேல்” படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் தனது 24வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையிலும், இயக்குநர் தேவ் கட்டா இயக்கும் “மாயசபா” என்ற அரசியல் பின்னணியைக் கொண்ட வெப்சீரிஸில் நாக சைதன்யா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்திக்கு எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும், அந்த வெப்சீரிஸுடன் நாக சைதன்யாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாக சைதன்யா தற்போது கார்த்திக் வர்மா இயக்கத்தில் தனது 24வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ஒரு மர்மம் மிக்க, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் திரைப்படமாகும். இதனை பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் சுகுமார் இணைந்து தயாரித்து வருகின்றனர்.சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.