‛ஜெய் பீம், வேட்டையன்’ படங்களை இயக்கிய தா. சே. ஞானவேல், சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகர் மோகன்லாலிடம் ‛தோசை கிங்’ படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால் அது அப்போது சாத்தியமாகவில்லை.

தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என மலையாளத் திரைப்பட வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படம் சரவணபவன் உணவக நிறுவனர் ராஜகோபாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. பல சுவாரஸ்யமான அம்சங்கள் இதில் இடம்பெறும் என கூறப்படுகிறது. ஜங்லி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான திரைக்கதை தா. சே. ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் இணைந்து எழுதியுள்ளனர்.